sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தோட்டத்து வீடுகளில் 'கேமரா' பொதுமக்களுக்கு அறிவுரை

/

தோட்டத்து வீடுகளில் 'கேமரா' பொதுமக்களுக்கு அறிவுரை

தோட்டத்து வீடுகளில் 'கேமரா' பொதுமக்களுக்கு அறிவுரை

தோட்டத்து வீடுகளில் 'கேமரா' பொதுமக்களுக்கு அறிவுரை


ADDED : ஜன 06, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார், ; தோட்டத்து வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தினர்.

அன்னூர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், குன்னத்தூர், சமுதாய நலக்கூடத்தில், நேற்று குற்ற விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் செல்வம் பேசுகையில், சந்தேகப்படும் நபர்கள் குறித்து, அன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 94981 01173, அல்லது கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981 81212 என்ற மொபைல் எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,என்றார்.

கூட்டத்தில், 'குடியிருப்பு பகுதிகள், தோட்டத்து வீடுகள், முதியவர்கள், குடியிருக்கும் வீடுகளில், சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி மின் விளக்குகளை எரிய விட வேண்டும். வெளியூர் போகும் சமயங்களில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் இரவு நேரங்களில் வீடுகள் காவல்துறையால் கண்காணிக்கப்படும். விலை உயர்ந்த நகைகள் மற்றும் அதிகமான பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கிகளில் வைக்க வேண்டும்.

'இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டினால், சந்தேகம் ஏற்பட்டால், அருகில் இருப்பவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு, வர வைத்து பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவசர காலங்களில், 100 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் இரவு வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். சாணை பிடிக்க வருவோர், போர்வை வியாபாரி, ஸ்டவ் ரிப்பேர் செய்வோர் ஆகியோரிடம் கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பூட்டி வைக்க வேண்டும்' என கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.

விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்குவிநியோகிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us