/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் யானைகள் உலா தொழிலாளர்களுக்கு அறிவுரை
/
எஸ்டேட்டில் யானைகள் உலா தொழிலாளர்களுக்கு அறிவுரை
ADDED : அக் 23, 2025 11:06 PM

வால்பாறை: வால்பாறையில் பகல் நேரத்தில் யானைகள் உலா வருவதால், தொழிலாளர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. யானைகள் தனித்தனி கூட்டமாக எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, கருமலை, சிவாகாபி, உருளிக்கல், சின்கோனா, கல்யாணப்பந்தல், சிறுகுன்றா, வெள்ளமலை, சோலையாறு உள்ளிட்ட இடங்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் காலை நேரத்தில் பணிக்கு செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ள தேயிலை காட்டில் சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்கூடாது.
மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் போதும் கவனமாக செல்ல வேண்டும். இரவு நேரத்தில் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால், எந்த சூழ்நிலையிலும் கதவை திறந்து வெளியில் வரக்கூடாது. யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

