/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுரை
/
மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுரை
ADDED : டிச 13, 2024 09:20 PM
அன்னுார்; ''வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, பேச்சாளர் பர்வீன் சுல்தானா, நவபாரத் பள்ளி ஆண்டு விழாவில் பேசினார்.
அன்னுார், நவபாரத் சர்வதேச பள்ளியின் 12வது ஆண்டு விழா நடந்தது. நிர்வாக அறங்காவலர் நித்தியானந்தம் வரவேற்றார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதாவது :
வாழ்க்கை அனைவருக்கும் வாய்ப்பு தருகிறது. வாய்ப்புகளை பயன்படுத்துவோர் வெற்றி பெறுகிறார்கள்.
பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடிய போது, ரீல்ஸ் பார்க்க வேண்டாம் என்றார். பெற்றோரிடம் உங்களது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாதீர்கள் என்றார்.
பிரதமரின் இந்த இரண்டு அறிவுரைகளும், பெற்றோரும், மாணவர்களும் பின்பற்ற வேண்டியவை. பெற்றோர் மொபைலில் செலவழிக்கும் நேரத்தை குறைத்தால் குழந்தைகளும் குறைத்துக் கொள்வார்கள். கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளி முதல்வர் பூங்கொடி ஆண்டு அறிக்கை வாசித்தார். பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.
நிர்வாக செயலாளர் நந்தகுமார், நிர்வாக அறங்காவலர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.