/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரமாக உணவு தயாரிக்க சத்துணவு ஊழியருக்கு அறிவுரை
/
சுகாதாரமாக உணவு தயாரிக்க சத்துணவு ஊழியருக்கு அறிவுரை
சுகாதாரமாக உணவு தயாரிக்க சத்துணவு ஊழியருக்கு அறிவுரை
சுகாதாரமாக உணவு தயாரிக்க சத்துணவு ஊழியருக்கு அறிவுரை
ADDED : நவ 25, 2024 10:38 PM
வால்பாறை; மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் மதிய உணவு வழங்க வேண்டும், என, விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில், சத்துணவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. சத்துணவு திட்ட மேற்பார்வையாளர் தினேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கார்த்திக் பேசியதாவது:
பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் இடத்தை, சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு சமைக்கும் பாத்திரங்களை அன்றாடம் கழுவி பயன்படுத்த வேண்டும்.
சமையலர், உதவியாளர்கள் சமைக்கும் போது தலையில் இருந்து முடி கொட்டாமல் இருக்க தலையில் கவசம் அணிய வேண்டும். முட்டையை வேக வைத்து, பரிசோதித்து, மாணவர்களுக்கு உரித்து வழங்க வேண்டும்.
சமையல் முடிந்த பின், உணவை சத்துணவு பணியாளர்கள் சாப்பிட்டு பார்த்து, குறைகளை நிவர்த்தி செய்த பின், மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு வழங்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.