/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு ஊக்கத்தொகை பட்டியலில் பிழை சரிபார்த்து 'எமிஸ்'ல் பதிவிட அறிவுரை
/
சிறப்பு ஊக்கத்தொகை பட்டியலில் பிழை சரிபார்த்து 'எமிஸ்'ல் பதிவிட அறிவுரை
சிறப்பு ஊக்கத்தொகை பட்டியலில் பிழை சரிபார்த்து 'எமிஸ்'ல் பதிவிட அறிவுரை
சிறப்பு ஊக்கத்தொகை பட்டியலில் பிழை சரிபார்த்து 'எமிஸ்'ல் பதிவிட அறிவுரை
ADDED : செப் 25, 2024 08:39 PM
பொள்ளாச்சி : சிறப்பு ஊக்கத்தொகை பெற பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை, எவ்வித பிழையுமின்றி 'எமிஸ்' தளத்தில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (சுயநிதி பாடப்பிரிவுகள் நீங்கலாக), 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 2022-23 கல்வியாண்டு, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் விபரம், பள்ளிகளில் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், பல மாணவர்கள் மற்றும் அவர்கள் பயின்ற பள்ளிகளின் விபரம் தவறாக இருப்பதாகவும், மீண்டும் வங்கிக் கணக்கு எண், மாணவர்களின் விபரத்தை தெளிவாக, 'எமிஸ்' தளத்தில் பதிவிடவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சில பள்ளிகளில் இருந்து அனுப்பப்பட்ட மாணவர்களின் விபரம் தவறாக இருப்பதால், மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, சரிபார்ப்புக்கு பின், எவ்வித பிழையுமின்றி 'எமிஸ்' தளத்தில் அந்த விபரம் பதிவேற்றம் செய்யப்படும்.
சில பள்ளிகளில், இன்னும் இது சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அந்த பள்ளிகளில் இருந்தும், மாணவர்களின் விபரத்தை முறையாக பதிவிட அறிவுறுத்தப்பட்டுளளது. தவறு ஏற்படும் மற்றும் விடுபடும் நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.