/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளூர் பிரச்னைக்கு போராட அறிவுரை
/
உள்ளூர் பிரச்னைக்கு போராட அறிவுரை
ADDED : அக் 21, 2024 11:42 PM
அன்னுார்: மக்கள் பிரச்சனைக்கு போராட அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அன்னுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மைல்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் தலைமை வகித்தார். கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., அருண்குமார் பேசுகையில், உள்ளூரில் உள்ள பொதுமக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.
மாநில செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், ஐ.டி., அணி நிர்வாகி லோகேஷ் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் ஊத்துப்பாளையத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் கோகுல், நகரச் செயலாளர் சவுக்கத் அலி உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.