/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
/
ஊராட்சி செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 28, 2025 10:22 PM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர்கள் பதவி காலம், கடந்த 5ம் தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், நேற்று ஊராட்சி செயலர்களுக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் சத்திய விஜயன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) பஷீர் அகமது மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இனிவரும் காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, ஊராட்சியின் முக்கிய பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். குப்பை தேங்காமல் அகற்ற வேண்டும், என, அறிவிக்கப்பட்டது.

