/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.இ.ஓ., அந்தஸ்து நிறுவனங்கள்: இரண்டாவது இடத்தில் தமிழகம்
/
ஏ.இ.ஓ., அந்தஸ்து நிறுவனங்கள்: இரண்டாவது இடத்தில் தமிழகம்
ஏ.இ.ஓ., அந்தஸ்து நிறுவனங்கள்: இரண்டாவது இடத்தில் தமிழகம்
ஏ.இ.ஓ., அந்தஸ்து நிறுவனங்கள்: இரண்டாவது இடத்தில் தமிழகம்
ADDED : ஜூலை 31, 2025 10:00 PM
கோவை; ஏ.இ.ஓ.,க்கள் எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயல்படுத்துநர் எண்ணிக்கையில், தேசிய அளவில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
ஏ.இ.ஓ., என்பது, சர்வதேச அளவிலான வர்த்தகத்தில், நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒரு சான்றிதழ். டபிள்யூ.சி.ஓ., எனப்படும் உலக சுங்க அமைப்பு, இந்த நடைமுறையை அறிமுகப் படுத்தியது. இந்தியாவில், சுங்கத் துறை இதற்கான சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் இதுவரை, 5,892 ஏ.இ.ஓ., அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் உள்ளன.
இதில் மஹாராஷ்டிரா, 1,749 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 1,029 நிறுவனங்களுடன் 2வது இடத்தில் உள்ளது; இது, தேசிய அளவில் 17 சதவீதம் ஆகும்.