/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 விக்கெட் வீழ்த்தினார் 'ஏரோ கிளப்' நாகராஜ பிரபு
/
5 விக்கெட் வீழ்த்தினார் 'ஏரோ கிளப்' நாகராஜ பிரபு
5 விக்கெட் வீழ்த்தினார் 'ஏரோ கிளப்' நாகராஜ பிரபு
5 விக்கெட் வீழ்த்தினார் 'ஏரோ கிளப்' நாகராஜ பிரபு
ADDED : ஜன 02, 2026 05:06 AM

கோவை, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.) சார்பில் 'லீக்' நுழைவுக்கான 'நாக் அவுட்' போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ். மைதானங்களில் நடக்கிறது.
ஏரோ கிரிக்கெட் கிளப் அணியும், ஸ்போர்பி புரொகாடமியும் மோதின. ஏரோ கிளப் அணி, 25 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு, 175 ரன் எடுத்தனர். கண்ணன் 42 ரன், சஞ்சை 34 ரன் எடுத்தனர். தனுஷ் 3 விக்கெட் வீழ்த்தினார். ஸ்போர்பி அணி, 25 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தனர். நாகராஜ பிரபு 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஆர்.வி. குரூப்ஸ் அணியும், கே.ஏ.டி. டர்ப் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஆர்.வி. அணியினர், 21 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 80 ரன் எடுத்தனர். சரவணகுமார் 31 ரன் எடுத்தார். ராஜ்குமார், அகிலாண்டேஸ்வரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கே.ஏ.டி. டர்ப் அணியினர், 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். விக்னேஷ், ராபர்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
வெற்றி விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், எலக்ட்ரா இ.வி. கிரிக்கெட் கிளப் அணியும் மோதியதில் விஜய் அணி 7 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்தது. கார்த்திக் 31 ரன் எடுத்தார். எலக்ட்ரா அணி 20.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து வென்றது. ஆன்டனி பீட்டர் 35 ரன், வருண் கணேஷ் 35 ரன் எடுத்தனர்.

