/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியில் பாதிப்பு 'சதம்' எங்கெங்கும் டெங்கு! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

UPDATED : ஜன 17, 2024 01:36 AM
ADDED : ஜன 16, 2024 11:49 PM

கோவை;மாநகராட்சி பகுதிகளில் கடந்த, 45 நாட்களில், 101 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகிய நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்தாண்டு இறுதியில் நல்ல மழை பெய்தது. மழை காலங்களில் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஏடீஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
பாதிப்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளில், மண்டல சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய, 'ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம்'(ஆர்.ஆர்.டி.,) தீவிரமாக கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நோய் பரவலை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் 'அபேட்' மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி பகுதிகளில், 2022ம் ஆண்டு 976 பேரும், 2023ல் 1,336 பேரும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகினர். தற்போது, டெங்கு பாதிப்பு தலைதுாக்க துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 36 பேர் நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
வடக்கு மண்டலம், 11, 12, 28வது வார்டுகள், கிழக்கு மண்டலம், 22, 23, 6, 7, 8 வார்டுகள், மத்திய மண்டலம், 70வது வார்டுகளில் தற்போது பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
கடந்தாண்டு டிச., மாதம், 65 பேர், கடந்த ஒரு வாரத்தில், 36 பேர் என, 101 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வடக்கு, கிழக்கு மண்டலத்தில் பாதிப்பு அதிகம். இதையடுத்து, ஆர்.ஆர்.டி.,குழு வாயிலாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவிர, மாநகராட்சி பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேவையான கொசு மருந்தும் கையிருப்பு உள்ளது.
டெங்கு கொசு உற்பத்தி காரணிகளுடன், அலட்சியமாக இருந்தவர்களிடம் இருந்து கடந்த டிச., மாதம் ரூ.1.60 லட்சம், இம்மாதம் ரூ.61 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு விஷயத்தில், பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.