/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் நிலையத்தில் காடு வளர்ப்பு திட்டம்
/
ரயில் நிலையத்தில் காடு வளர்ப்பு திட்டம்
ADDED : மார் 02, 2024 10:39 PM

பெ.நா.பாளையம்;துடியலூர் ரயில் நிலையத்தில், மியாவாக்கி முறையில் காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த, 6500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோவை நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி, ஹெச்.சி.எல்., பவுண்டேஷன், சிறுதுளி சார்பில், துடியலூரில் உள்ள ரயில் நிலையத்தில் மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை டி.ஜி., வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு, காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இங்கு மியாவாக்கி முறையில், 6500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், ராமகிருஷ்ண கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சமூக பணியியல் துறை மாணவர்கள், டி.ஜி., வைஷ்ணவ் கல்லூரி மாணவர்கள், ராமகிருஷ்ண கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவகுமார், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் ஜெயசதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

