/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஆண்டுகளுக்கு பின் ரோடு சீரமைக்க முடிவு
/
10 ஆண்டுகளுக்கு பின் ரோடு சீரமைக்க முடிவு
ADDED : அக் 17, 2024 10:16 PM

வால்பாறை: பல்வேறு போராட்டத்திற்கு பின், ரோடு சீரமைக்க பூமி பூஜை போடப்பட்டதால், சோலையாறுடேம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து சோலையாறுடேம், மளுக்கப்பாறை பிரிவு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு போடப்பட்டுள்ளது. சோலையாறு டேமில் இருந்து ேஷக்கல்முடி செல்லும் ரோடு, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, சோலையாறுநகரில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது.
இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ரோட்டை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடையின்மை சான்று வழங்கியதால், விரைவில் நகராட்சி சார்பில், 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோடு சீரமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சோலையாறுடேம் பகுதியில் ரோடு அமைக்க பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் இந்துமதி, ஜெயந்தி, அன்பரசு கலந்து கொண்டனர்.