/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை அருகே நரபலி கொடுத்த கூலி தொழிலாளி கைது: ஆறு மாதத்துக்கு பின் துப்பு துலங்கியது
/
காரமடை அருகே நரபலி கொடுத்த கூலி தொழிலாளி கைது: ஆறு மாதத்துக்கு பின் துப்பு துலங்கியது
காரமடை அருகே நரபலி கொடுத்த கூலி தொழிலாளி கைது: ஆறு மாதத்துக்கு பின் துப்பு துலங்கியது
காரமடை அருகே நரபலி கொடுத்த கூலி தொழிலாளி கைது: ஆறு மாதத்துக்கு பின் துப்பு துலங்கியது
ADDED : மார் 13, 2024 01:50 AM
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் தேவனாபுரம் கிராமம் உள்ளது. இதில் சுப்பம்மாள் என்பவரின் தோட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி ஒரு மண்டை ஓடு மற்றும் அதனுடன் அழுகிய நிலையில் பாதி உடம்பு ஒன்றும் கிடந்தது.
இதையடுத்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, உடலை கைப்பற்றினர். முதல் கட்ட விசாரணையில் அது 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் என தெரியவந்தது. மேலும் உடல் இரண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் பூஜை செய்யப்பட்டு இருந்ததால், இது நரபலியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.
மேலும் இது தொடர்பாக ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அடையாளம் தெரியாத 40 வயதுள்ளவரை கொலை செய்தது, கோவை புலியகுளத்தை சேர்ந்த முத்து, 45, என்பது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பையில் உள்ள கோவிலில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டு தேவனாபுரத்தில் கிடந்த அழுகிய சடலத்தின் அருகே முத்துவின் ஆதார் அட்டை கண்டெடுக்கப்பட்டது. முத்துவுக்கு மாந்திரிகத்தில் நம்பிக்கை இருந்தது. முத்து சிறப்பு பூஜை செய்து யாரையாவது நரபலி கொடுப்பதற்காக திட்டம் தீட்டிய நிலையில், டாஸ்மாக் கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தவரிடம், மது அருந்தலாம், நான் வாங்கி தருகிறேன் எனக் கூறி அவரை தேவனாம்புரம் அழைத்து வந்தார்.
பின் அவருடன் மது அருந்திவிட்டு, அந்த நபர் போதையில் இருந்த போது, அவரை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, அவரை நரபலி கொடுத்து முத்து கொலை செய்திருக்கிறார்.
மேலும், கருப்பன் கடவுள் சிறப்பு பூஜை நடத்தி நரபலி கொடுக்கச் சொன்னார் என முத்து வாக்கு மூலம் தந்துள்ளார், என்றனர்.

