/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயோதிகம் என்பது ஒரு வியாதியல்ல
/
வயோதிகம் என்பது ஒரு வியாதியல்ல
ADDED : மார் 02, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயோதிகம் என்பது ஒரு வியாதியல்ல; அது ஓர் உயிரியல் நடைமுறை. இக்கால கட்டத்தில் தோன்றும் உடல், உள்ளம் மற்றும் சமூக மாற்றங்களை, ஒரு சமநிலையான வழியில் எதிர்நோக்கப் பழகிக் கொண்டால், பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.
முதுமையும், மரணமும் தவிர்க்க முடியாதவை. முதியோரின் வேண்டுகோள்கள், சிலருக்கு புலம்பல்களாகவும், சகிக்க முடியாத பேச்சுகளாகவும் மாறி விடுகின்றன. பிள்ளைகள் முதியோரை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதை களைய வேண்டியதும், முதியோரை பாதுகாக்க வேண்டியதும் நம் பொறுப்பே.

