/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினக்கூலி ரூ.475 வழங்க ஒப்பந்தம் கையெழுத்து
/
தினக்கூலி ரூ.475 வழங்க ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : நவ 10, 2025 11:58 PM
வால்பாறை: வால்பாறையில், தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள பேச்சு வார்த்தையின் அடிப்படையில், தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் அடிப்படையில், வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது.
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில், தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்று தந்த ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலாளர் கருப்பையாவுக்கு சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.
தொழிற்சங்க தலைவர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நகர காங்., தலைவர் அமீர், சட்டசபை தொகுதி காங்.,கட்சி தலைவர் தேவா, சங்க செயலாளர் டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர்.

