/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிரக்கிங்' செல்ல அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
'டிரக்கிங்' செல்ல அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
'டிரக்கிங்' செல்ல அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
'டிரக்கிங்' செல்ல அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : நவ 10, 2025 11:58 PM

வால்பாறை: 'டிரக்கிங்' செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, சுற்றுலா பயணியர் ரசிக்கும் பகுதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஆழியாறு கவியருவி, அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், சக்தி - தலநார் வியூபாயிண்ட், தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார், நல்லமுடி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்க, வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட உருளிக்கல் செக்போஸ்ட் முதல் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையம் வரை சுற்றுலா பயணியர் 'டிரக்கிங்' செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இது சுற்றுலா பயணியரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறியதாவது:
வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் உருளிக்கல் செக்போஸ்ட் முதல் மானாம்பள்ளி பவர்ஹவுஸ் வரையில், 8 கி.மீ.,துாரம் வனத்துறையினர் பாதுகாப்புடன் சுற்றுலா பயணியர் 'டிரக்கிங்' செல்லலாம்.
சுற்றுலா பயணியர் 20 பேர் 'டிரக்கிங்' செல்ல கட்டணமாக, 999 ரூபாய் செலுத்த வேண்டும். காலை, 8:00 மணிக்கு 'டிரக்கிங்' அழைத்து செல்லப்பட்டு, மீண்டும் உருளிக்கல் செக்போஸ்ட் பகுதிக்கு, மதியம், 12:00 மணிக்கு திரும்புவர். நான்கு மணி நேரத்தில், 16 கி.மீ.,துாரம் 'டிரக்கிங்' செல்வதால் புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, இயற்கை அழகையும் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுற்றுலா பயணியர் பாதுகாப்பாக அழைத்து செல்லபடுவர்.
இவ்வாறு, கூறினர்.

