/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளில்லை :மனு கொடுத்து மக்கள் ஆதங்கம்
/
குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளில்லை :மனு கொடுத்து மக்கள் ஆதங்கம்
குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளில்லை :மனு கொடுத்து மக்கள் ஆதங்கம்
குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளில்லை :மனு கொடுத்து மக்கள் ஆதங்கம்
ADDED : நவ 10, 2025 11:58 PM

பொள்ளாச்சி: 'குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என, ஆனைமலை, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதி மக்கள், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.ஆனைமலை பேரூராட்சி பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஹக் லே-அவுட் பகுதியில், கடந்த, 1983ம் ஆண்டு அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் குடியிருப்பு பகுதியாகும். ஆனைமலை மத்திய பகுதியில் அமைந்துள்ள தெருவில், 42 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் பேரூராட்சி நிர்வாகத்தினால் ஏற்படுத்தவில்லை.
பேரூராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும், குடியிருப்பு பகுதி வழியே செல்கிறது. ஆனால், கழிவுநீர் செல்வதற்காக எந்தவொரு வடிகால் வசதியும் பேரூராட்சியால் ஏற்படுத்தவில்லை. ரோடு வசதியும் இல்லை.
இதனால், மழை காலங்களில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து செல்கிறது. விஷபூச்சிகள் நடமாட்டத்தால் அச்சமாக உள்ளது. கழிவுநீர் வெளியேற்றுவது சவாலாக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
குடியிருப்பு பகுதியில் மட்டும் தார் சாலை அமைக்க முன்னுரிமை பட்டியலில் இடம் பெறுவதில்லை. சாலை வசதி மேம்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பலன் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள, அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை பொதுமக்களுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது.சிறிது காலம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் செயல்பட்டது.
தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்ட பின், அம்மா திருமண மண்டபம் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. இந்த மண்டபம், புதர் மண்டியும், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.
எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அம்மா திருமண மண்டபத்தை திறக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
* சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பாலாஜி நகர், ஜோதி கார்டன், சன் கார்டன், காவியா கார்டன் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த, 25 ஆண்டுகளாக இப்பகுதிகளில் வசிக்கிறோம். தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தவில்லை. பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம், மது அருந்துவோர், கஞ்சா புகைப்போர், திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள், பொதுக்கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.தார்சாலை, கழிவுநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

