/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு நாட்களுக்குப் பிறகு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் திறப்பு
/
ஏழு நாட்களுக்குப் பிறகு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் திறப்பு
ஏழு நாட்களுக்குப் பிறகு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் திறப்பு
ஏழு நாட்களுக்குப் பிறகு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் திறப்பு
ADDED : அக் 12, 2025 11:17 PM
அன்னுார்:ஏழு நாட்களுக்குப் பிறகு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இன்று முதல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் நிதி பயன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கும் 1,000 ரூபாய் பென்சனை, 5,000 ஆக உயர்த்த வேண்டும்.
சங்கங்களுக்கு அரசு தரவேண்டிய ஏழு சதவீத வட்டி பல ஆண்டுகள் நிலுவை உள்ளதை உடனே வழங்க வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் கடந்த 6ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தது. கடந்த ஐந்து நாட்களாக கோவை மாவட்டத்தில் 145 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படவில்லை.
கூட்டுறவு சங்கங்களுக்கு கீழ் செயல்படும் 900 ரேஷன் கடைகளும் செயல்படவில்லை. இந்நிலையில் கடந்த 10ம் தேதி சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து ஐந்து நாட்களுக்குப் பிறகு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கீழ் இயங்கும் 900 ரேஷன் கடைகள் நேற்றுமுன்தினம் செயல்பட்டன, பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
'வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இன்று (13ம் தேதி) முதல் வழக்கம்போல் செயல்படும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்