ADDED : அக் 12, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., நமச்சிவாயம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மத்தம்பாளையம் ஈ.ஆர். தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரபு, 30, சோமசுந்தரம்,71, சண்முக சுந்தர், 42, முத்துசாமி,44, உதயகுமார், 48, ஜெகதீசன், 37, ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
சூதாட்டத்துக்கு பயன்படுத்திய இரண்டு சேவல் மற்றும், 7000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.