ADDED : ஆக 16, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையின் வேளாண் பொறியியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவன வேளாண் இன்ஜினியரிங் பி.டெக்., பிரிவு மாணவர்களுக்கு, நவீன உற்பத்தி முறைகள், விவசாயத்தில் அவற்றின் பயன்பாடுகள் குறித்த நேரடி அனுபவத்தை வழங்க அக்வா குரூப் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு தொழில் முறைப் களப்பயணம் சென்றனர்.
நிகழ்ச்சியை நிறுவன வணிக மேலாளர் சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார். பயணத்தில், ஸ்மார்ட் உற்பத்தி, தானியங்கி முறை, ரோபோட்டிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். பம்ப் சோதனை முறைகள், ஆற்றல் திறன் தேவைகள், பி.இ.இ., தரநிலைகள் மற்றும் ஆற்றல் குறியீட்டு முறை குறித்தும் தெரிந்துகொண்டனர்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை பேராசிரியர் மகேந்திரன் மற்றும் திவ்யபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
