/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் கண்காட்சி; விவசாயிகள் பங்கேற்பு
/
வேளாண் கண்காட்சி; விவசாயிகள் பங்கேற்பு
ADDED : பிப் 07, 2025 10:04 PM

கோவில்பாளையம்; தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வையம்பாளையத்தில், நாராயணசாமி நாயுடு நினைவு மண்டபம் அருகே அவரது நூற்றாண்டை முன்னிட்டு, வேளாண் கண்காட்சி நேற்று முன்தினம் நடந்தது.
நவீன திசு வாழை, வீரிய ரக நாற்றுக்கள், விதைகள், நவீன பம்பு செட்டுகள், விவசாய உபகரணங்கள் என 25 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கும் வேளாண் கருவிகளும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டன.
கண்காட்சியில் மேக் நிறுவனங்களின் சேர்மன் அத்தப்பா மாணிக்கம், விவசாயிகளின் 60 ஆண்டு கால போராட்டம் குறித்த நூலை வெளியிட வேளாண் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் மது ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.