/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவையான உரங்கள் இருப்பு வேளாண் அதிகாரிகள் தகவல்
/
தேவையான உரங்கள் இருப்பு வேளாண் அதிகாரிகள் தகவல்
ADDED : ஆக 29, 2025 09:40 PM
ஆனைமலை, ; ஆனைமலை வட்டாரத்தில் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.
ஆனைமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:
ஆனைமலை வட்டாரத்தில் மொத்தம் 15 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் விற்பனை சங்கங்கள் உள்ளன. இங்கு, யூரியா - 24.05 டன், டி.ஏ.பி. - 95.2 டன், பொட்டாஷ் -- 105.25 டன், சூப்பர் பாஸ்பேட் -- 25 டன் மற்றும் காம்ப்லெக்ஸ் - 65.3 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 14 தனியார் உர உற்பத்தி நிலையங்களில் யூரியா - 28.6 டன், டி.ஏ.பி. - 44.65 டன், பொட்டாஷ் -- 39.30 டன், சூப்பர் பாஸ்பேட் -- 36.40 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் - 100.10 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு, 523.09 டன் உரங்கள் இருப்பு உள்ளது. நெல், சோளம், நிலக்கடலை, தென்னை மற்றும் சாகுபடி, இதர பயிர்களுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.விவசாயிகளுக்கு தடையில்லாமல் உரம் வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

