ADDED : ஆக 10, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார், ;அன்னுார் அருகே குருக்கம்பாளையத்தில் 'உழவரைத் தேடி', வேளாண் நிகழ்ச்சி நடந்தது.
இதில் காருண்யா பல்கலை வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சமூக வரைபடம், வளங்களின் வரைபடம், காலநிலை அட்டவணை, தினசரி செய்ய வேண்டிய பணிகள், செல்வாக்கு அட்டவணை ஆகியவற்றை வரைபடங்களாக வரைந்து காட்சிக்கு வைத்தனர். மேலும் வரைபடங்கள், அட்டவணை குறித்து விவசாயிகளுக்கு, மாணவர்கள் விளக்கிக் கூறினர். இந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற னர்.

