/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் விவசாய கருத்தரங்கு
/
கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் விவசாய கருத்தரங்கு
கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் விவசாய கருத்தரங்கு
கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் விவசாய கருத்தரங்கு
ADDED : ஜூலை 13, 2025 11:39 PM
கோவை; நரசீபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிட்., சார்பில், மாபெரும் வேளாண் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய கோவை கிளையின், மண்டல மேலாளர் வடிவேல் வரவேற்றார். சென்னை டான்பெட் கூடுதல் பதிவாளர் முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். கோவை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, சென்னை உரம் டான்பெட் இணைப்பதிவாளர்கள் சித்ரா, காவேரி, ஆகியோர் பேசினர்.
இதில், டான்பெட்டின் சொந்த தயாரிப்புகளான பாமணி கலப்புரங்கள், நீரில் கரையும் உரங்கள், கால்சியம் நைட்ரேட், எஸ்.ஓ.பி., நுண்ணுாட்ட சத்துகள், பூச்சி கொல்லிகள் மற்றும் ஐ.பி.எல்., யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் குறித்து, நரசிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் சக்திவேல், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் கார்த்திகேயன், இந்தியன் பொட்டாஷ் நிறுவன துணை மேலாளர் ஹரிபாபு உட்பட, டான்பெட் பணியாளர்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.