/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் மாணவியர்
/
விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் மாணவியர்
ADDED : மே 09, 2025 06:48 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வாணவராயர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், ஆனைமலை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில், மதிப்பீடு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கிராமப்புற மக்களின் தேவை, பிரச்னைகளை கேட்டறிதல், கிராம வளங்களின் வரைபடம், கல்வியறிவு விகிதம், பருவகால நாட்காட்டி, வருவாய் மற்றும் செலவு வரைபடம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை செயல்முறையுடன் விளக்கம் அளித்தனர்.
அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஓரக்கலியூர் கிராமத்தில், மாணவியர், 'பைட்டோபிளாஸ்மா' வாயிலாக தென்னையில் ஏற்படும் வாடல் நோயை குறைக்க, 'கொக்கொ கார்ன்' பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுஒருபுறமிருக்க, குஞ்சிப்பாளையம் கிராமத்தில் தன்னார்வ அமைப்பு வாயிலாக, ஸ்ரீ ராமஜெயம் அறக்கட்டளையுடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கினர்.

