/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு
/
வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு
ADDED : ஜன 08, 2024 11:14 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில், கிராமப்புற மதிப்பீடு நடந்தது.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லுாரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பில், வடசித்துார் கிராம நிர்வாக அலுவலகம் முன் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் கீழ், பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு நடந்தது.
கிராம வேளாண் முன்னேற்ற குழு தலைவர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். விவசாயி விவேகானந்தர், சமூக ஆர்வலர் இளங்கோ உதவியுடன், விவசாயிகளின் அன்றாடச் செயல்பாட்டின் தொகுப்பாக, தினசரி காலண்டர் வரையப்பட்டது.
அதில், 24 மணி நேரத்தை குறிக்கும் விதத்தில் ஒரு பெரிய வட்டம் வரையப்பட்டு, விவசாயிகளின் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில் பாகங்கள் பிரிக்கப்பட்டது.
ஒவ்வொரு பாகமும் அந்த செயல்பாட்டின் நேரத்தை குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது. இந்த வரைப்படம் விவசாயிகளின் வாழ்க்கை முறை, அவர்களது அயராத உழைப்பு பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் சத்தியபிரியா, பிரியா, பார்த்தசாரதி, மகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலால் இந்த நிகழ்வு நடந்தது.