/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு
/
பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு
பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு
பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு
ADDED : நவ 25, 2025 05:53 AM
கோவை: ஏ.ஐ.சி.டி.இ., அடல் வாணி சார்பில், 'அக்ரோ இன்னோவேட்ஸ்' எனும் பெயரில், வேளாண் தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு, சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.
மூன்று நாள் மாநாட்டில் வேளாண் தொழில் வாய்ப்புகள், மதிப்புக்கூட்டல், விநியோக சங்கிலி மேம்பாடு, டிரோன் பூச்சிக்கொல்லி தெளிப்பு தொழில்நுட்பம், பாசன மேலாண்மை, இயந்திரவேளாண் நுட்பங்கள், உணவுப்பதப்படுத்துதல், துல்லியக் கூர்மை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், வேளாண் வல்லுனர்கள் உரையாற்றினர்.
வேளாண் தொழில்நுட்ப புதுமையை ஊக்குவித்த மாநாட்டில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.