/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலார் மின் கட்டமைப்பு : பல்கலையில் கருத்தரங்கு
/
சோலார் மின் கட்டமைப்பு : பல்கலையில் கருத்தரங்கு
ADDED : நவ 25, 2025 05:52 AM
கோவை: வேளாண் பல்கலையில், பி.டெக்., எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மாணவர்களுக்கான சோலார் குறித்த பயிற்சிக் கருத்தரங்கு நடந்தது. வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் தலைமை வகித்தார்.
சோலார் பிவி (ஒளி மின்னழுத்தம்) தொகுதிகள், மின் நிலையத்துக்கான தேர்வு குறித்து இங்கிலாந்தின் டீசைட் பல்கலை பேராசிரியர் செந்திலரசு கருத்துரை வழங்கினார். சரண் சோலார் நிறுவன நிர்வாக இயக்குநர், மெகாவாட் திறன்கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து விவரித்தார். எல் அண்டு டி சோலார் மின் வடிவமைப்பு இன்ஜி., அன்பரசு, பெரிய அளவிலான சோலார் மின் நிலையங்களின் வடிவமைப்பு குறித்து விளக்கினார்.

