/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலை முதுகலை, பி.எச்டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
/
வேளாண் பல்கலை முதுகலை, பி.எச்டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வேளாண் பல்கலை முதுகலை, பி.எச்டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வேளாண் பல்கலை முதுகலை, பி.எச்டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 20, 2024 10:26 PM
கோவை : முதுகலை மற்றும் பி.எச்டி., படிப்புகளுக்கான சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 11 கல்லுாரிகளில், 34 துறைகளில் முதுகலை படிப்பு, 29 துறைகளில், பி.எச்டி., படிப்பும் வழங்கப்படுகிறது.
வரும், 2024 - 25 கல்வியாண்டுக்கான முதுகலை, பி.எச்டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை, 16ம் தேதி துவங்கியது.
தகுதியான மாணவர்கள், https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளங்கலை(வேளாண்) மற்றும் அது சார்ந்த படிப்புகள் பயின்ற மாணவர்கள் முதுகலை படிப்புக்கும், முதுகலை(வேளாண்) அல்லது, தோட்டக்கலை, எம்.டெக்.,(வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் பி.எச்டி., படிப்புக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்(புரபஷனல் பட்ட சான்றிதழ்) சமர்பிப்பதன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே, சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 94890 56710 என்ற எண்ணிலும், சந்தேகங்களுக்கு, pgadmission@tnau.ac.in என்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.