கால்நடைகள் சந்திக்கும் பிரச்னை வேளாண் பல்கலை தருகிறது தீர்வு
கால்நடைகள் சந்திக்கும் பிரச்னை வேளாண் பல்கலை தருகிறது தீர்வு
ADDED : மார் 12, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
கோவை: கோடை நெருங்குகிறது. கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்படும். சமாளிப்பதற்காக, தீவனச் சோளம், கம்பு நேப்பியர் புல் போன்றவற்றை பசுந்தீவனமாக பயிர் செய்யுங்க. இது கறவை மாடுகளுக்கான தீவனத் தேவையை பூர்த்தி செய்யும்.
கறவை மாடுகளுக்கு ஸ்மார்ட் தாது உப்புக் கலவையை அடர் தீவனத்துடன் தரவும். கோமாரி நோய் தடுப்பூசி போடவும். ஆடுகளுக்கு அம்மை தடுப்பூசி போடவும்.
இன்று முதல் வரும் 15ம் தேதி வரை, கோவையில் வறண்ட வானிலையே நிலவும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஓரிரு பகுதிகளில், தூறல் மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலை உயர்வதால், காய்கறிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதலை சமாளிக்க 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிக்கவும்.
வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
