/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்லி.,யில் வேளாண் பல்கலை மாணவர்கள்
/
பார்லி.,யில் வேளாண் பல்கலை மாணவர்கள்
ADDED : ஜூலை 15, 2025 12:19 AM
கோவை,; கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், பார்லி., வளாகத்தைப் பார்வையிட்டனர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், கடந்த ஏப்.,லில் கோவை வேளாண் பல்கலைக்கு வருகை புரிந்தார். அப்போது, பல்கலை மாணவர்களை பார்லி.,யைப் பார்வையிட டில்லிக்கு அழைப்பு விடுத்தார். இதன் அடிப்படையில், பல்வேறு துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் 23 மாணவர்கள் மற்றும் 2 உதவிப் பேராசிரியர்கள், இந்திய பார்லி.,க்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். லோக்சபா, ராஜ்யசபாவை பார்வையிட்ட மாணவர்களுக்கு, பார்லியின் அமைப்பு, இரு அவைகளின் செயல்பாடு, ஜனநாயக இந்தியாவில் சட்டம் உருவாக்கப்படும் செயல்முறை, சபாநாயகர், உறுப்பினர்கள் அமர்விடம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பழைய மற்றும் புதிய பார்லி., கட்டடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.