ADDED : ஏப் 15, 2026 08:37 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பங்குனி பருவத்தில் கோடை மழை பெய்யததால், மானாவாரி நிலத்தில் பயிர் சாகுபடி பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், சித்திரை பருவத்தில் சோளம், கம்பு, நிலக்கடலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், கடந்த ஒரு வாரமாக, 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவுவதால், விவசாய பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. கோடை மழை பெய்த பிறகே, நிலத்தை உழவு செய்து, சாகுபடிக்கும் தயார்படுத்த முடியும். இந்நிலையில், வெயில் இதே அளவில் தொடர்ந்தால், இந்தாண்டு சித்திரை பருவத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும், என்கின்றனர் விவசாயிகள்.
