/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் உழவர் நலத்துறை சிறப்பு முகாம்
/
வேளாண் உழவர் நலத்துறை சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 29, 2025 11:43 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னிமடையில் 'உழவரை தேடி' வேளாண்மை உழவர் நல துறை சார்பில், சிறப்பு முகாம் நடந்தது.
இதில், வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர்கள் பங்கேற்று, தங்கள் துறை சார்பில், தமிழக அரசின் பல்வேறு உழவர் நலம் சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினர்.
குறிப்பாக, உழவர் அடையாள எண் பதிவு செய்தல், பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ நிதி தொடர்பாக விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நடமாடும் மண் ஆய்வு வாகனம் வாயிலாக விவசாயிகள் நேரடியாக மண் பரிசோதனை செய்து, உடனுக்குடன் ஆய்வு முடிவுகள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மண் பரிசோதனை ஆய்வு செய்வதை விவசாயிகள் நேரில் கண்டறிந்தனர். முகாமில், பன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர்கள் கோமதி, சரண்யா, துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால், கால்நடை மருத்துவர், மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.