/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க வேளாண் துறையினர் அறிவுரை
/
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க வேளாண் துறையினர் அறிவுரை
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க வேளாண் துறையினர் அறிவுரை
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க வேளாண் துறையினர் அறிவுரை
ADDED : நவ 07, 2024 08:17 PM
பெ.நா.பாளையம்; ரசாயன உர பயன்பாட்டை குறைக்க பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
விவசாயிகள், ரசாயன உரங்களை மட்டுமே நம்பி இருக்காமல், மொத்த உர பரிந்துரையில், 25 சதவீதம் தழைச்சத்தாக உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.
தழைச்சத்து பயன்பாடு குறித்து பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில், 'தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், மக்காசோளம், பயிறு வகை மற்றும் நிலக்கடலை பயிர்களில் தழைச்சத்து பயன்பாட்டுக்காக விவசாயிகள் யூரியா உரத்தை மட்டுமே நம்பி இருக்காமல், மொத்த உர பரிந்துரையில், 25 சதவீதம் தழைச்சத்து உயிர் உரங்களை பயன்படுத்தலாம். விவசாயிகள் மண்வள அட்டையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ள உர அளவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
'குறிப்பாக, யூரியா போன்ற தழைச்சத்து அதிகமாக உள்ள உரங்களை, தேவைக்கு அதிகமாக பயிர்களுக்கு அளிப்பதால், பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் குறையும், மண் வளமும் பாதிக்கப்படும். விவசாயிகள், 25 சதவீதம் உயிர் உரங்கள் வாயிலாக வழங்கலாம். தானிய பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம், பயிர் வகை பயிர்களுக்கு ரைசோபியம், எண்ணெய் வித்து பயிர்களான கடலை போன்றவற்றுக்கு ரைசோபியம் கடலை போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தலாம்.
'விவசாயிகள் உயிர் உரங்களை சொட்டுநீர் வாயிலாகவும் வழங்கலாம். உயிர் உரங்களை பயன்படுத்தும் போது அவை காற்றில் உள்ள நைட்ரஜனை நிலை நிறுத்தி, பயிர்களுக்கு வழங்குவதுடன், மண்ணில் எளிதில் கிடைக்கப் பெறாத ஊட்டச்சத்துக்களை, பயிர்களுக்கு எளிதில் கிடைக்குமாறு செய்கிறது. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்து, சாகுபடி செலவு குறைவதுடன், மண்ணின் வளமும் மேம்படுகிறது' என்றனர்.