/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் சோள விதை வேளாண் துறை அழைப்பு
/
மானிய விலையில் சோள விதை வேளாண் துறை அழைப்பு
ADDED : ஏப் 03, 2025 11:51 PM
சூலுார்; மானிய விலையில் சோள விதைகளை பெற்று பயனடைய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு சோள விதைகள் மற்றும் நுண்ணூட்ட கலவை, சுல்தான்பேட்டை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
சோளம் கே 12 ரகம் ஒரு கிலோ விலை, 77 ரூபாய். இதில், மானியம், 32 ரூபாய் போக, 45 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ, 128 ரூபாய் உளுந்து விதைகள், 48 ரூபாய் மானியம் போக, 80 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. நுண்ணூட்ட கலவை, மானியம் கழித்து, 70 ரூபாய்க்கு வழங்குகிறோம். தேவைப்படும் விவசாயிகள், சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

