/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையில் 6 திட்டங்களில் பயனடையலாம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
கோடையில் 6 திட்டங்களில் பயனடையலாம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
கோடையில் 6 திட்டங்களில் பயனடையலாம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
கோடையில் 6 திட்டங்களில் பயனடையலாம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
ADDED : ஏப் 12, 2025 11:28 PM
கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில், செயல்படுத்தப்படும் 6 திட்டங்களில் பயன்பெறுமாறு, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 611 மி.மீ., மழை பொழிகிறது. 2024ம் ஆண்டில், 822 மி.மீ., மழை பெய்துள்ளது. கூடுதல் மழை காரணமாக, கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குளம், குட்டைகளில் நீர் உள்ளதால், கோடை கால சாகுபடி நன்றாகவே இருக்கும்.
கோடை சாகுபடித் திட்டத்தில், குறைந்த நீர்த்தேவையுள்ள பயறு வகைகள், நிலக்கடலை, எள் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. 275 ஹெக்டரில் பயறு வகைகள், 500 ஹெக்டரில் நிலக்கடலை, 250 ஹெக்டரில் எள் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற, 300 ஹெக்டர் பரப்புக்கு விதைகள், உயிர் உரங்கள், அங்கக உரம் மற்றும் நானோ யூரியா ஆகியவை வழங்கப்பட உள்ளது.
பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க, பருத்தி விதை மானியத்தில் வழங்கப்படுகிறது. மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தில், 15 தொகுப்புகள் ஒருங்கிணைந்த பண் ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விதை கிராம திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்ககத்தின் கீழ், சான்று பெற்ற உயர் விளைச்சல் தரக்கூடிய, கே12 ரக சோள விதைகள், விதையுடன் கலக்கக்கூடிய சூடோமோனஸ் புளூரசென்ஸ், திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துகள், செயல்விளக்கத்திடல்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டங்களில் பயன்பெற, வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.