/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவரை தேடி சிறப்பு முகாம்; வேளாண் துறை ஏற்பாடு
/
உழவரை தேடி சிறப்பு முகாம்; வேளாண் துறை ஏற்பாடு
ADDED : மே 27, 2025 09:44 PM
பெ.நா.பாளையம்; உழவர்களை வேளாண்துறையினர் நேரடியாக சந்திக்கும் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
'உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை' என்ற தலைப்பில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில், இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்பு துறை அதிகாரிகள் உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே நேரடியாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அப்போது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சார்பு துறைகளின் நல திட்டங்களை எடுத்து கூறி பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் நாளை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் துவக்க விழா பிளிச்சி கிராமம், மத்தம்பாளையம் சமுதாயக்கூடம், சோமையம் பாளையம் கிராமம், காளப்பநாயக்கன்பாளையம் அத்தனூர் அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் நாளை காலை, 10:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது.
இதில், விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.