/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க உரம், விதை வழங்குது வேளாண் துறை
/
சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க உரம், விதை வழங்குது வேளாண் துறை
சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க உரம், விதை வழங்குது வேளாண் துறை
சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க உரம், விதை வழங்குது வேளாண் துறை
ADDED : ஜூலை 31, 2025 10:01 PM
கோவை; மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அறிக்கை:
கோவை மாவட்டத்தில் சோளம், 22, 488 ஹெக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில், சோளம் சாகுபடியை ஊக்குவிக்க கோவை மாவட்டத்துக்கு ரூ. 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 12 வட்டாரங்களிலும் 650 ஹெக்டர் பரப்பில், தொழில்நுட்ப செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட உள்ளன.
இத்திடல்களில் மண் ஆய்வு செய்யப்படும். 2.5 ஏக்கருக்கு உயர் விளைச்சல் சோள ரகங்களான கோ 32, கே 12 ரக விதைகள், 10 கிலோ, இவ்விதைகளுடன் கலந்து விதைக்க, 2.5 கிலோ சூடோமோனாஸ் புளூரசென்ஸ், திரவ உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா தலா அரை லிட்டர், 11 நுண்ணூட்டங்களை வழங்கக் கூடிய தானியங்கள் நுண்ணூட்டச் சத்து 12.5 கிலோ ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. ரூ. 6,000 மானியத்தில் இந்த இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர்கள், ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க மாவட்ட திட்ட இயக்குநரை 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.