ADDED : ஜன 26, 2024 11:42 PM
பொள்ளாச்சி: விவசாயம் மற்றும் விவசாய உப பொருட்கள் தொடர்பான கண்காட்சி, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.அதில், பொள்ளாச்சி, கோவையை சுற்றியுள்ள முன்னணி விவசாய நிறுவனங்கள், கண்காட்சி மற்றும் விற்பனைக்கு என, பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை, கோவையை சேர்ந்த 'ப்ரைடு ஈவன்ட்ஸ்' ஒருங்கிணைத்துள்ளது. துவக்க விழாவில், 'ட்ரூ ப்ரூக்கர்' ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளர் பூபதி, 'நெட்சூர்' நிறுவன பொள்ளாச்சி வினியோகஸ்தர் செல்லமுத்து, கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில பொருளாளர் ரங்கசாமி, 'வேற லெவல் பிசினஸ்' நிறுவன உரிமையாளர் அசோக்குமார், 'ப்ரைடு ஈவன்ட்ஸ்' நிறுவனத்தார் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
விவசாயம் தொடர்பான தேடல் உள்ளவர்களுக்கான இக்கண்காட்சி, நாளை (28ம் தேதி) வரை நடக்கிறது, என, 'ப்ரைடு ஈவன்ட்ஸ்' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

