/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி வரும் 10ம் தேதி துவக்கம்
/
கோவையில் 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி வரும் 10ம் தேதி துவக்கம்
கோவையில் 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி வரும் 10ம் தேதி துவக்கம்
கோவையில் 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி வரும் 10ம் தேதி துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 10:49 PM

கோவை; கோவையில் வரும் 10ல் 'அக்ரிஇன்டெக்ஸ் 2025' கண்காட்சி நடக்கிறது. ஐந்து நாட்கள் நடக்கும் கண்காட்சிக்கு, 2 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, கொடிசியா தலைவர் கார்த்திகேயன், அக்ரிஇன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் சேர்மன் ஸ்ரீஹரி, துணைத்தலைவர் விஜயக்குமார் கூறியதாவது:
கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா) கடந்த 23 ஆண்டுகளாக, அக்ரிஇன்டெக்ஸ் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், நடக்க உள்ளது. ஐந்து நாள் கண்காட்சியில், 600 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த விவசாயிகள் 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிடுவர் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு 1.3 லட்சம் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் ஏதேனும் ஒரு அடையாளச் சான்றினை காட்டினால், இலவசமாக நுழையலாம். மற்ற பார்வையாளர்களுக்கு 50 ரூபாய் நுழைவுக் கட்டணம். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
கண்காட்சியில், மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையங்கள் பங்கேற்கின்றன. வட மாநிலங்களை சேர்ந்த வேளாண்மை கருவி, விதை, இடுபொருள் தயாரிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
கண்காட்சியையொட்டி, இரண்டு நாள் கருத்தரங்கு விவசாயிகளுக்காக நடத்தப்படுகிறது. இதில், எரிபொருள் வேளாண்மை, பசுமை ஆற்றல் பொருட்கள் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. ஜூலை 13ல் 'உழவே தலை 7.0' என்ற கருத்தரங்கை, இந்திய தொழில் வர்த்தகசபை நடத்துகிறது.
இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் அளவுக்கு, வணிக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.