ADDED : ஜூலை 15, 2025 08:54 PM
கோவை; கோவை, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், வேளாண் காடு வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி, நாளை துவங்குகிறது.
பல்பயன் தரும் வேளாண் காடுகள் என்ற தலைப்பிலான இப்பயிற்சியில், உணவு உற்பத்தி மற்றும் மர உற்பத்திக்கு சமநிலையிலான முக்கியத்துவத்துடன், வேளாண் காடு வளர்த்தல் மற்றும் பல்வேறு வித மரப்பயிர்கள் குறித்து, முதுநிலை விஞ்ஞானிகள் பயிற்சி அளிக்கின்றனர். நேரடி களப் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் அல்லாத பிற பயனாளர்களும், வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், பசுமைத் தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.