ADDED : ஜன 15, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாநகரில் போக்குவரத்தை கண்காணிக்க, மாநகர போலீஸ் மற்றும் ஸ்பான்சர்கள் உதவியுடன் அனைத்து சிக்னல்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை அவிநாசி ரோடு, அண்ணா சிலை அருகில், இரண்டு ஏ.ஐ., சிசிடிவி கேமராக்கள் பொருத்த, உயிர் அமைப்பினர் ஸ்பான்சர் செய்தனர். அதன்படி, இரண்டு இடத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன ஏ.ஐ. சிசிடிவி கேமராவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் துவங்கி வைத்தார்.
