ADDED : ஜன 27, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
கோவை: மரபியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்பில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச மாநாடு, பாரதியார் பல்கலையில் நாளை நடக்கிறது. பதிவாளர் ராஜவேல் தலைமை வகிக்கிறார்.
மதுரை அரவிந்த் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையஇயக்குனர் தர்மலிங்கம் துவக்க உரை நிகழ்த்துகிறார். டில்லி எய்ம்ஸ் பேராசிரியர் டி.பி.சிங், உயர்கல்வித்துறை உறுப்பினர் செயலர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
