/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் கல்லுாரியில் ஏஐ ேஹக்கத்தான்
/
தனியார் கல்லுாரியில் ஏஐ ேஹக்கத்தான்
ADDED : செப் 21, 2025 11:29 PM

கோவை; தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லுாரி, ஐபிஎம் ஸ்கில்ஸ் பில்ட் மற்றும் ஸ்மார்ட் பிரிட்ஜ் சார்பில், ஜெனரல் ஏஐ ேஹக்கத்தான் கல்லுாரி இயக்குனர் வினோத் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜெகதீசன் கூறியதாவது:
வளரும் பொறியாளர்களிடையே படைப்பாற்றல், தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்க்கும் வகையில், இந்த ேஹக்கத்தான் நடத்தப்பட்டது. பல்வேறு பொறியியல் துறைகளை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டனர்; 400 அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின. செயற்கை நுண்ணறிவில் சுகாதாரம், சட்டம், நிதி கல்வி மற்றும் புத்தக உருவாக்கம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடந்தன.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஐதராபாத் ஸ்மார்ட் பிரிட்ஜ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் அகாடமி ரிலேஷன்ஸ் மேலாளர் அக் ஷய் குமார் கோத்தாரி, கல்லுாரி செயலாளர் நீலராஜ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.