/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிக்கெட் விற்பனையை தடுக்க வருகிறது ஏ.ஐ.,
/
டிக்கெட் விற்பனையை தடுக்க வருகிறது ஏ.ஐ.,
ADDED : ஜன 22, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ரயில் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வதை, ஏ.ஐ., உதவியுடன் கண்காணிக்க, ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறைகள் உள்ளிட்ட நேரங்களில், ஏஜென்டுகள் ரயில் டிக்கெட்களை முறைகேடாக எடுத்து, அதை பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.,) ரயில்வே பாதுகாப்பு படை இணையம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு தளங்களை கண்காணிக்கின்றனர். டிக்கெட் கவுன்டர்களில், சி.சி.டி.வி., கேமரா பொருத்தியுள்ளனர்.

