/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மனித மூளையை ஏ.ஐ., சோம்பேறியாக்குகிறது'
/
'மனித மூளையை ஏ.ஐ., சோம்பேறியாக்குகிறது'
ADDED : செப் 17, 2025 10:32 PM

கோவை; கோவை கஸ்துாரி சீனிவாசன் கலையரங்கில், 'ரிதமிக் பேலட் தொடர் 2024-25' என்ற பெயரில், ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது.
நேரு கல்லுாரி த லைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ண குமார் துவக்கி வைத்தார். ஓவியர் ரமேஷ் வர்மாவின் 35 படைப்புகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 21 வரை இக்கண்கா ட்சி நடைபெறும்.
ரமேஷ் வர்மா பேசுகையில், ''தற்போதைய காலகட்டத்தில் ஓவியங்கள் படைப்பதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் இன்றியமையாததாக மாறி வருகிறது. ஏ.ஐ. மிக எளிதாகவும், விரைவாகவும் ஓவியங்களை நம் கைகளில் கொடுத்து விடுகிறது. உதாரணமாக, ஒரு மனிதன் மூன்று மாதங்கள் எடுத்து, ஒரு ஓவியத்தை உருவாக்கும் அதே வேளையில், ஏ.ஐ. மூன்று நிமிடங்களில் செய்து முடித்து விடும். இது, மனிதனின் மூளையைச் சோம்பேறி ஆக்கி, சிந்திக்கும் திறனைக் குறைத்து விடுகிறது. படைப்பாற்றலுக்கான மூளையின் செயல்பாடுகளை முடக்குவதற்கு வாய்ப்புள்ளது,'' என்றார்.