/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
/
கே.ஐ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
ADDED : ஜன 28, 2025 07:30 AM

கோவை : கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில் (கே.ஐ.டி.,), ஜூனிபர் நிறுவனத்தின் நவீன ஏ.ஐ., ஆய்வகம் கல்லுாரியில் திறக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் தொழில்துறை இடைவெளியை குறைக்கும் முயற்சியில் ஒன்றாக, தொழில்நுட்ப ஆய்வகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. துவக்கவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, 50 பேராசிரியர்களுக்கு நெட்வொர்க்கிங், ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வகம் வாயிலாக, மாணவர்கள், ஆசிரியர்கள் ஏ.ஐ.,மெஷின் லேர்னிங், நெட்வொர்க்கிங் கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து தொடர்ந்து பயிற்சி பெறவுள்ளனர்.
நிகழ்வில், கல்லுாரி நிறுவன தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், சி.இ.ஓ., மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், ஜூனிபர் நெட்வொர்க் நிகழ்ச்சிகள் மேலாளர் அர்ச்சனா யாதவ், எஜூ ஸ்கில் அறக்கட்டளை தலைவர் சுபாஜித் ஜகதேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

