/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
ADDED : நவ 26, 2024 11:47 PM

கோவை; அரசூர் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் அதிநவீன ஏ.ஐ., ஆய்வகம் திறக்கப்பட்டது.
கே.பி.ஆர்., கல்லுாரி மற்றும் நேவிகேட்ஸ் லேப்ஸ் இணைந்து கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு ஆய்வகத்தை கட்டமைத்துள்ளனர். அதன் துவக்க விழா நேற்று நடந்தது.
திறப்பு விழாவில், 'நேவிகேட்ஸ் லேப்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நந்தீஸ் குமார் பேசுகையில், ''ஏ.ஐ., சிறப்பு ஆய்வகம் கற்றல், ஆராய்ச்சி, மற்றும் தொழில் துறையோடு இணைந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கு மையமாக செயல்படும்'' என்றார்.
திறப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் சரவணன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

