/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை பதுங்கிய பகுதியில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா
/
சிறுத்தை பதுங்கிய பகுதியில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா
சிறுத்தை பதுங்கிய பகுதியில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா
சிறுத்தை பதுங்கிய பகுதியில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமரா
ADDED : ஏப் 10, 2025 10:29 PM

வால்பாறை, ; வால்பாறை, ரொட்டிக்கடையில் வீட்டின் முன் விளையாடிய சிறுவர்களை பிடிக்க வந்த சிறுத்தையை கண்காணிக்க, அந்தப்பகுதியில் வனத்துறையினர் கேமரா பொருத்தியுள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள, ரொட்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது வீட்டின் முன் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, புதரில் இருந்த சிறுத்தை வீட்டுவாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை நோக்கி வந்தது. இதை கண்ட வளர்ப்பு நாய் குரைத்ததும், குழந்தைகள் வீட்டினுள் ஓடி உயிர் தப்பினர். சிறுத்தை புதருக்குள் சென்றது. இந்த சம்பவம் அவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து, தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தி, சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ரொட்டிக்கடை பகுதியில், சிறுத்தை நடந்து வந்த கால்தடத்தை ஆய்வு செய்த பின், அந்தப்பகுதியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சிறுத்தை வரும் போது, கேமராவில் படம் பிடிப்பதோடு, அலாரமும் அடிக்கும். அதன் வாயிலாக பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்கலாம். சிறுத்தை நடமாடும் பகுதியில் மாலை நேரங்களில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

