தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டுக்குருவி பாதுகாக்க 'ஏஐ' தொழில்நுட்பம்

சிட்டுக்குருவி பாதுகாக்க 'ஏஐ' தொழில்நுட்பம்

சிட்டுக்குருவி பாதுகாக்க 'ஏஐ' தொழில்நுட்பம்


ADDED : மார் 26, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, கோவையை சேர்ந்த சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை, பறவை பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.

சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையில், 'Chiti.ai' என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளரை ஆர்.வி.எஸ் கல்விக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் கணேஷ் அறிமுகப்படுத்தினார். இதை அறக்கட்டளையின் நிறுவனர் தனசேகர் பெற்றுக்கொண்டார்.

இயற்கையோடு குழந்தைகளையும், தொழில்நுட்பத்தையும் இணைக்கும் முயற்சியாக, chittukuruvigalarakkattalai.com எனும் அறக்கட்டளையின் இணையதளத்தில் மூன்று புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குருவிகளுக்கு கூடு அமைத்தல், உணவளித்தல் மற்றும் பராமரிப்பு குறித்து பொதுமக்களும் மாணவர்களும் கேட்கும் கேள்விகளுக்கு, 'ஸ்பேரோ ஏஐ அசிஸ்டென்ட் ' தொழில்நுட்பம் உடனடி பதில்களை வழங்கும்.

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குருவிகளை ஈர்க்கவும், இயற்கையான சூழலை உருவாக்கவும் பிரத்யேகமான பறவை கீச்சு ஒலி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் குருவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதைப் பொதுமக்கள் நேரலையாகக் கண்காணிக்க முடியும்.

அறக்கட்டளை நிறுவனர் தனசேகர் கூறுகையில், ''வீடுகள் மற்றும் பள்ளிகளில் கூடு பெட்டிகளை அமைப்பதால், நகர்ப்புற பறவை பாதுகாப்பு அறிவியலை வலுப்படுத்தும் தரவுகளை வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்,'' என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us